அரசு பஸ் நடத்துனரை தாக்கிய வட மாநில தொழிலாளர்கள் போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

X
Komarapalayam King 24x7 |14 Feb 2025 6:10 PM ISTகுமாரபாளையத்தில் அரசு பஸ் நடத்துனரை வட மாநில தொழிலாளர்கள் தாக்கியதால், சக பயணிகள் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திலிருந்து குமாரபாளையம் நோக்கி அரசு டவுன் பஸ் குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை 04:00 மணியளவில் சீராம்பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து கரும்பு வெட்டும் கூலி வேலை செய்ய வந்த ஒரு பெண் 6 வட மாநில தொழிலாளர்கள் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக ஏறினார்கள். ஓட்டுனராக பழனியப்பன், நடத்துனராக ரஞ்சித்குமார் பணியில் இருந்தனர். நடத்துனர் ரஞ்சித்குமார் டிக்கெட் வாங்க சொல்ல, பின்னால் இருப்பவர்கள் வாங்குவார்கள் என்றும், பின்னால் சென்று கேட்டால் முன்னால் இருப்பவர்கள் வாங்குவார்கள் என்றும் அலைக்கழித்து உள்ளனர். 6 பேருக்கும் ஒரே டிக்கெட்டாக நடத்துனர் கொடுத்துள்ளார். அதை வாங்கிய ஒருவன், நடத்துனரை அடிக்க, மற்றொருவனும் அடித்து, தனித்தனி டிக்கெட்டாக கொடுக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இது பற்றி உடன் பயணித்த பயணிகள் கேட்க, அவர்களையும் தாக்க கை ஓங்கி, மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு பேருந்தை விடச் சொல்ல, போலீஸ் ஸ்டேஷன் வந்து, அந்த 6 நபர்களை போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது: வட மாநில தொழிலாளர்கள் எல்லா வேலையிலும் வந்து இங்குள்ள நபர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர். மேலும் இவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆக ஆக, இது போல் தைரியமாக அடிக்கும் அளவிற்கு துணிந்து உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். எல்லை மீறும் இது போன்ற நபர்களை சிறையில் அடைத்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள். இல்லாவிட்டால் இவர்கள் அட்டகாசம் இன்னமும் அதிகம் தான் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
