சொத்து வரி

X
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொந்தமாக நிலம், குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் போன்றவை வைத்துள்ளவர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை வசூலித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் மாநகராட்சியின் திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில், வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு வரி செலுத்தக்கோரி முறையாக நோட்டீஸ் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் அறிவிப்பு விடுத்தும் வருகின்றனர். இந்த வரியினங்களை வசூலிக்கும் வகையில், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சில பகுதிகளில் வசிக்கும் வரிவிதிப்புதாரர்கள் மேற்படி வசூல் மையங்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சியில் சொத்து வரியை 100 சதவீதம் வசூலிக்கும் வகையில், ஜி பே, போன் பே, பேடியம் ஆகிய செயலிகள் மூலம் செலுத்த ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Next Story

