ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆரணி வட்டா்டசியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1-4-2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், இளநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அரசு ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் மு.தென்னரசு தலைமை தாங்கினார். தொடக்கக்கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமால், பள்ளிக்கல்வி்த்துறை ஒருங்கிணைப்பாளர் என்.சொக்கலிங்கம், ஜேக்டோ, ஜியோ மாவட்ட செயலாளர் லஷ்மணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் சிவவிஜயகுமார், எஸ்.ஆனந்த், வெ.திருமலை, தேவானந்தம், சண்முகம், அருண்பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

