திருமருகலில் கோரிக்கைகளை வலியுறுத்தி

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகலில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பாரதி, அனைத்து உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் ராஜா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட தலைவர் சித்ரா வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் மன்ற நிர்வாகி திருவருட் செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story