ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

X
அரியலூர், பிப்.14- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த கோரி ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்., அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் ஜெயங்கொண்டம் வட்டார கிளை ஜாக்டோ ஜூயோ அமைப்பு சார்பில் ஜாக்டோ ஜூயோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலத் தலைவர் நம்பிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.,மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்., மேலும் வரும் 25 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் தெரிவித்தனர்.முன்னதாக தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர்அரங்கநாதன் வரவேற்பு பேசினார்.. ஜாக்டோ ஜியோ பாலசுப்பிரமணியம், சண்முகம்,பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எம் ஆர் பி பி செவிலியர் மேம்பாட்டு சங்க ராகவன் தமிழக ஆசிரியர் மன்றம் மாவட்ட தலைவர் ஜேசுராஜ் வாழ்த்தி பேசினார். முடிவில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் இளமுருகு நன்றி கூறினார்.
Next Story

