புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்கள்*

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்கள்*
X
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்கள்*
திருச்சுழி அருகே உடையனாம்பட்டி அரசுப் பள்ளியில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையனாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு ஆறாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புல்வாமா தாக்குதல் நடந்து 6 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய துணை இராணுவ வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில் நாடு முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சுழி அருகே உள்ள உடையனாம் பட்டி அரசுப் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராமப் பொது மக்கள் இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் உயிரிழந்த வீரர்களுக்கு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், திருச்சுழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர்கள் தூவி இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், திருச்சுழி காவல் துறையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Next Story