நகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டுவிழா

X
Komarapalayam King 24x7 |14 Feb 2025 8:53 PM ISTகுமாரபாளையம் புத்தர் வீதி, நகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டுவிழா நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தர் வீதி, நகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டுவிழா தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது. கிருஷ்ணவேணி ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன் பங்கேற்று, அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார்கள். பி.டி.ஏ. தலைவர் வாசுதேவன், நிர்வாகிகள் பாலசுப்ரமணி, மாதேஸ்வரன், தண்டபாணி, கவுன்சிலர் வள்ளியம்மாள், பாண்டிசெல்வி, முன்னாள் தலைமை ஆசிரியைகள் முத்தமிழ்செல்வி, தில்லைக்கரசி, உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
Next Story
