காரியாபட்டி அருகே பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்*

X
காரியாபட்டி அருகே பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் மேலத்தெருவைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது பசுமாடு மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த 20 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது. பசுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் காரியாபட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாழடைந்த கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பசுவை நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

