சேதுபாவாசத்திரம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை

X
சேதுபாவாசத்திரம் பகுதியில் பிப்.15 சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், நாடியம், குப்பத்தேவன், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், ஆத்தாளூர், பேராவூரணி, சேதுரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்லும் மின் பாதைகளில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும். மேலும் பொதுமக்கள் மின்தடை பற்றிய புகார்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணை அழைத்து புகார்கள் மற்றும் மின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Next Story

