சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்                        

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்                        
X
வேளாண்மை
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வரும் நில உடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாமை  வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஆய்வு செய்தார்.  சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள  80 வருவாய் கிராமங்களிலும் நில உடைமை பதிவுகளை சரிபார்க்கும் முகாம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம், மகளிர் திட்ட சமூக வள பயிற்றுநர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களை  வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம் ) எஸ்.மாலதி ஆய்வு செய்தார்.  பின்னர் அவர்  கூறியது, "விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களை தங்களது பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் நடைபெறும் முகாமிற்கு நேரில் எடுத்து சென்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு ஆதார் அட்டை எண் போன்று  விவசாய அடையாள எண் வழங்கப்படும்"  என்றார்  ஆய்வின்போது சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story