தென்காசியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

X
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் நேற்று மாலை நேர ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்ரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும், 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் மற்றும் அரசு பணியாளா்களின் பணிக் காலத்தினை, பணியில் சோ்ந்த நாள் முதல பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜ்குமாா்,மனோகா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் செல்வகுமாா் தொடக்கவுரையாற்றினாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிச்சைக்கனி, மாவட்டச் செயலா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் பேசினா். மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் துரைசிங் நிறைவுறையாற்றினாா். பாபுராஜ் நன்றி கூறினாா்.
Next Story

