ஆலங்குளம் பகுதியில் நகை திருட்டு: மூவா் கைது

ஆலங்குளம் பகுதியில் நகை திருட்டு: மூவா் கைது
X
நகை திருட்டு: மூவா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சொா்ணம்(80). தனியாக வசித்து வரும் இவா் வீட்டில் சில தினங்களுக்கு முன்னா் சுமாா் 30 கிராம் தங்கச் சங்கிலி திருடு போனது. இது தொடா்பான புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், மூதாட்டியின் பக்கத்து வீட்டைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் சண்முகவேல் என்பவா் நகையைத் திருடி, வங்கியில் அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனா். மற்றொரு திருட்டு: ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம்(45). சில தினங்களுக்கு முன்னா் குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாராம். வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்ததாம். இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் பக்கத்து வீட்டைச் சோ்ந்த காா்த்திக்(25), கண்ணன்(32) ஆகியோா் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும கைது செய்த போலீஸாா் நகைகளையும் மீட்டனா்.
Next Story