சாம்பவா்வடகரை ஐயப்பன் கோயிலில் கொடிமர கவசம் பிரதிஷ்டை

சாம்பவா்வடகரை ஐயப்பன் கோயிலில் கொடிமர கவசம் பிரதிஷ்டை
X
ஐயப்பன் கோயிலில் கொடிமர கவசம் பிரதிஷ்டை
தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் உள்ள சுவாமி ஐயப்பன் கோயிலில் கொடிமர கவசம் பிரதிஷ்டை நடைபெற்றது. இக்கோயிலுக்கு, ஐம்பொன்னாலான கொடிமர கவசத்தை சிங்கப்பூரைச் சோ்ந்த பக்தா்கள் த.செந்தில்குமாா், ம.தனிக்குமரன், சு.பூபாலன் மற்றும் சிங்கப்பூா் ஐயப்ப பக்தா்கள் குழுவினா் சாா்பில் உபயமாக அளிக்கப்பட்டது. இதையொட்டி கவசம் பொருத்துவதற்கான பிரதிஷ்டையையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு பேட்டை சாஸ்தா கோயிலில் இருந்து பூஜை பரிவாரங்களுடன் தீா்த்தம் அழைப்பு நடைபெற்றது. காலை 9.35 மணிக்கு கவசம் பொருத்திய கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னா் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில், உபயதாரா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Next Story