கோவை: குண்டு வெடிப்பு தினம் - பாதுகாப்பு வளையத்தில் கோவை !

X

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு நினைவஞ்சலி தினத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க வினர் சார்பில் ஆர் எஸ் புறத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றும் பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையொட்டி கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என்று கோவையில் 2000 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அத்துடன் நேற்று காதலர் தினம் என்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் பூங்காக்கள் கோவையில் உள்ள குளக்கரைகள் ஆகியவற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story