பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருப்பத்துார் மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில்,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய சங்க தலைவர் வெற்றி முருகன் தலைமை நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தின்போது அஞ்சல் துறை தனியார் மையம் ஆக்குவதை கண்டித்தும்,பணி நேரம் உயர்த்துவதை கண்டித்தும், ஜார்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில் கோட்ட செயலாளர்கள் ரமேஷ், ரவி, சக்திவேல், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



