மூதாட்டியை தள்ளிய காவலர் சஸ்பெண்ட்

மூதாட்டியை தள்ளிய காவலர் சஸ்பெண்ட்
X
சஸ்பெண்ட்
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில், அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் எப்போதும் பரபரப்புடன் மருத்துவமனை வளாகம் என்பது காட்சி அளிக்கும். இதனிடையே, உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் காவலர் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியுள்ளது.காவலர் ஒருவர் மூதாட்டி மற்றும் இளைஞர் ஒருவரை, ஆவேசமாக அடித்து அறை ஒன்றில் இருந்து வெளியே தள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எதனால் காவலர் இவ்வாறான கோபத்துடன் நடந்துகொண்டார் என தெரியவில்லை. வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி நிலையில் மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி சம்பந்தப்பட்ட காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார் .
Next Story