ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் அருகே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை, உயர்நிலை பள்ளி, மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடுவன் அரசு வழங்கும் ஊதியத்திற்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணை எண்.243 உடனடியாக திரும்ப பெற வேண்டும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சி ஏ எஸ் ஊக்க ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும் என்பதனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Next Story






