குமரி :  கட்டிட காண்ட்ராக்டர் மர்ம சாவு மனைவி புகார் 

குமரி :  கட்டிட காண்ட்ராக்டர் மர்ம சாவு மனைவி புகார் 
X
ஆரல்வாய்மொழி
குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஞான ராஜசேகர் (35). கட்டிட காண்ட்ராக்டர். இவருடைய மனைவி மீனா. இவர்களுக்கு 2வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. தற்போது மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.       இந்த நிலையில் ஞான ராஜசேகர் செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பணம் கொடுத்திருந்தார். அந்த பணத்தை வாங்க செல்வதாக கூறிவிட்டு கடந்த 9ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்பு மர்மமான முறையில் காயமடைந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.      தொடர்ந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதை எடுத்தவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஞானசேகரின் மனைவி மீனா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.         அந்த புகாரில் எனது கணவரின் சாவு தொடர்பாக சந்தேகம் உள்ளது.  விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story