மணமேடு கடற்கரையில் இறந்து கரை ஒதுக்கிய

மணமேடு கடற்கரையில் இறந்து கரை ஒதுக்கிய
X
5 அடி நீள டால்பின் திமிங்கலம்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி அடுத்த மணல்மேடு கடற்கரையில், சுமார் 5 அடி நீளம் உள்ள டால்பின் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. திமிங்கலம் சுமார் 300 கிலோ எடை இருக்கும் என அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த திமிங்கிலத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள், மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கடற்கரையின் அருகில் பள்ளம் தோண்டி இறந்த திமிங்கலத்தை புதைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆழ் கடலில் நீந்தும் போது, பாறைகளில் மோதியோ அல்லது கப்பலின் மீது மோதியோ மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்து திமிங்கலம் கரை ஒதுங்கி இருக்கலாம் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Next Story