விவசாயிகள் இரண்டாவது நாள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த காவல்துறை
சாலை மறியல் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் யாதவ் அசோக் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகளுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்ற நிலையில் தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, பிஏபி வெள்ளகோவில் காங்கேயம் நீர் பாசன பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி உட்பட 100- க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண் விவசாயிகளை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றும், கைது செய்து அனைவரையும் அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். விவசாயிகளை துன்புறுத்தி வாகனத்தில் ஏற்றியதால் விவசாயிகள் அனைவரும் கதறிக்கொண்டு, ஆடைகள் கலைந்த நிலையில் வாகனத்தில் அழுதவாறு இறந்த ஆடுகளையும், தங்களின் குடும்பங்களையும் நடுரோட்டில் விட்டுவிட்டு வாகனத்தில் பரிதாபமாக சென்றனர். மேலும் ஒரு பெண்ணின் ஆடையை பிடித்து உதவி ஆய்வாளர்கள் இழுத்ததாகவும், விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போது செல் போன்களை எடுத்துக்கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக காங்கேயம் சென்னிமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
Next Story



