ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அதிரடி ஆய்வு

X
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் அதிரடியாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னிமாந்துரை கொட்டப்பட்டி கிராமத்தில் இருந்து தனது ஆய்வை தொடங்கி புதுப்பட்டி, மாங்கரை, குட்டத்துப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மெட்டுர் பலக்கனூத்து சாலை, சித்தரேவு சாலை, ஆத்தூர் ஊராட்சி சாலை மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி வழியாக வரும் சித்தரேவு சாலை, காந்திகிராமம் சாலை மற்றும் அம்பாத்துரை- செம்பட்டி சாலை ஆகிய சாலைகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக்கத்தில் நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த முன்னாள் தலைமைப் பொறியாளரும், சிறப்பு அலுவலருமான சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் சங்கர், குமரன், நபார்டு மற்றும் கிராமசாலைகள் கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், கோட்டப் பொறியார் மகேஷ்வரன், உதவி கோட்டப் பொறியாளர்கள் கண்ணன், முனீஸ்வரன் உட்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். ஆத்தூர் தொகுதியில் சேதம் அடைந்த சாலைகளை புதுப்பிப்பதோடு தேவைப்படும் இடங்களில் வடிகால் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு செல்லும் வகையில் சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதிவுக்காலம் முடிந்துவிட்டது. கட்சி நிர்வாகிகளும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து ஊராட்சிகளுக்கு தேவைப்படும் நலத்திட்டங்களை தேர்வு செய்து தனது கவனத்திற்கு கொண்டுவந்து அவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும் என கூறினார். தமிழகத்திலேயே சிறப்பாக ஆத்தூர் தொகுதியில் சிறப்பாக செயல்படுத்தி வரும் கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம் கட்டப்படும் வீடுகளை கண்காணித்து உடனடியாக வீடுகளை கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதோடு மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் வீடுகளை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஆலோசனையின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாறைப்பட்டி ராமன், பிள்ளையார்பட்டி முருகேசன், அமைச்சரின் உதவியாளர் ஹரிஹரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி, ஒன்றிய பொறியாளர்கள் ராமநாதன், மைக்கேல்ஜான்பிரிட்டோ, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், சித்தையன்கோட்டை பேரூர் கழக செயலாளர் சக்திவேல், அகரம் பேரூராட்சி மன்றத்தலைவர் நந்தகோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜம்ரூத்பேகம், சீவல்சரகு ராணிராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காங்கேயன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வீரக்கல் செல்வி காங்கேயன், வண்ணம்பட்டி காணிக்கைசாமி, சிந்தாமணி நாகசுந்தரம், பாப்பாத்தி மற்றும் திமுக நிர்வாகிகள் ஆத்தூர் நாசர்கனி, சையதுஅபுதாகீர், டாஸ்மாக் வடிவேல் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

