ஆட்சியர் தலைமையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் வழிகாட்டி மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் தலைமையில் நடந்தது
தர்மபுரி மாவட்டம், சோகத்தூரில் அமைந்துள்ள தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணி அளவில் தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையம் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தொன்போஸ்கோ கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினர்களாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ மணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் முன்னிலையாக டொன்போஸ்கோ கல்லூரி செயலர் அருட்தந்தை ராபர்ட் ரமேஷ் பாபு கல்லூரி முதல்வர் ஆனந்த் கலந்து கொண்டனர் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர் இறுதியில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு தனியார் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Next Story