கடலூர்: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

கடலூர் அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் திட்டக்குடி சொர்ணம் ஆறுமுகம் மஹாலில் நடைபெறுகிறது. நெய்வேலி சட்டமன்ற தொகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் மாலை 4 மணி அளவில் நெய்வேலி தொ. மு.ச அலுவலகத்தில் நடைபெறுகிறது. அது சமயம் மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கழக, நகரக் கழக, பேரூர் கழக, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கழக சார்பு அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தொ.மு.ச நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story