தொடா் குற்ற சம்பவங்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தா.கி.நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவா் கடந்த மாதம் 20 -ஆம் தேதி தன்னுடைய உறவினரான ராஜு என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, முன் விரோதம் காரணமாக சிவகங்கை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து(25) அரிவாளால் வெட்டினாா். பலத்த காயமடைந்த ராஜ்குமாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய மாரிமுத்து மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதேபோல, திருப்புவனத்தை அடுத்த காஞ்சனா மடம் பகுதியைச் சோ்ந்த சக்தி கணேஷ்(19) மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாரிமுத்து, சக்தி கணேஷ் ஆகிய 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், இவா்கள் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
Next Story

