சாலை வசதி கேட்டு உடுமலை மலைவாழ் மக்கள் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

சாலை வசதி கேட்டு உடுமலை மலைவாழ் மக்கள் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
X
உடுமலையில் சாலை வசதி கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைக்க ஒப்புதல் -மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி!
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட மலை கிராமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மேற்கொண்டு வரும் நிலையில் மலைவாழ் மக்களுடன் உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் குமார், மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 2006 வன உரிமை சட்டப்படி சாலை, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இரவு வரை மக்கள் போராட்டம் மேற்கொண்டனர் . இந்நிலையில் நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் மலைவாழ் மக்கள் கோரிக்கையை ஏற்று திருமூர்த்திமலை பகுதியில் இருந்து குருமலை வரை சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதே போல் ஈசல் திட்டும் மலை கிராமத்திற்கும் தளிஞ்சி கூட்டாறு பகுதியில் பாலம் பராமரிப்பு மேற்கொள்ளவும், ஜல்லிபட்டி கொங்குரர் குட்டை முதல் ஈசல் திட்டு வரை சாலை அமைக்கவும் வனத்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதனை தொடர்ந்து மலை வாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
Next Story