நகராட்சி சார்பில் தொழில் உரிமம் பெறுவதற்கான ஆலோசனை கூட்டம்

X
திருச்செங்கோடு நகர் பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சி தொழில் உரிமம் பெறுவது தொடர்பாக வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மற்றும் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையர் அருள் முன்னிலை வகித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம் தொழில் உரிமம் ஏன் பெற வேண்டும் என்பது குறித்து வியாபாரிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்து அனைவரும் தொழில் உரிமைகளை பிப்ரவரி மாத இறுதிக்குள் செலுத்திடவும் கேட்டுக்கொண்டார்
Next Story

