கோடியக்காடு மஹான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்கா

கோடியக்காடு மஹான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்கா
X
மஹானின் ரவ்ல சரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில், மஹான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்க்காவின் சந்தனக்கூடு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக, கோடியக்காடு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து சந்தனக்கூடு வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்க்காவை வந்தடைந்து, நேற்று அதிகாலை மஹானின் ரவ்ல சரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது. விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோடிக்கரை, கோடியக்காடு ஜமாத்தார்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில், கோடியக்காடு, கோடியக்கரை கிராம மக்கள் ஜமாத்தார்கள், இந்து, கிறிஸ்தவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story