நகராட்சி குடிநீர் குழாய் மீட்டர் கருவி திருட்டு

நகராட்சி குடிநீர் குழாய்  மீட்டர் கருவி திருட்டு
X
நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயின் மீட்டர் கருவியை மர்ம நபர் திருடி சென்றார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது.. நகராட்சி வார்டு குடியிருப்பு பகுதியில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி சார்பில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் வீடு வீடாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீரை முறையாக பயன்படுத்துவதற்கு தண்ணீர் மீட்டர் கருவி ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ளது . தோராயமாக ஒரு வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பை ஏற்படுத்துவதற்கு நகராட்சி சார்பில் 5000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் தண்ணீர் மீட்டர் கருவி மட்டும் ரூபாய் 1800 ரூபாய் விலை வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டு போயர் தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த குடிநீர் குழாயின் தண்ணீர் மீட்டர் கருவிகள் இரண்டும் வெள்ளிக்கிழமை அன்று  இரவோடு இரவாக  மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்த பொழுது கையில் பையுடனும், டார்ச் லைட்டுடன்,தலையில் குள்ள அணிந்தபடி  வரும் மர்ம நபர் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டு விட்டு, தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த இரண்டு தண்ணீர் மீட்டர் கருவிகளை திருடி செல்வது அதில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் இந்த சிசிடிவி காட்சி வீடியோவை பகிர்ந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.தண்ணீர் மீட்டர் கருவியை திருடும் மர்ம  நபர்கள் அதன் உள்ளே உள்ள காப்பரை தனியே பிரித்து எடுத்து 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பழைய இரும்பு கடையில் விற்று காசு வாங்கி வருவது தெரியவந்துள்ளது.  பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் ஆயிரக்கணக்கான  நகராட்சி குடிநீர் குழாய் தண்ணீர் மீட்டர் கருவிகள் திருடப்பட்டு வருவதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...மேலும் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் பைப் லைன்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் ..
Next Story