முகத்தாடை அறுவை சிகிச்சை செய்து சாதித்த மருத்துவர்கள்

முகத்தாடை அறுவை சிகிச்சை செய்து சாதித்த மருத்துவர்கள்
X
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த 32 வயதுடைய குருலட்சுமி என்ற பெண்ணுக்கு பிறவிலேயே முகத்தாடையில் மூட்டு இணைத்து வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 32 ஆண்டுகளாக நாக்கை வெளியே நீட்டமுடியாமல் முன்பக்கத்தில் உள்ள ஒரு பல்லை மருத்துவர்கள் உதவியோடு உடைத்து அதன் வழியே
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த 32 வயதுடைய குருலட்சுமி என்ற பெண்ணுக்கு பிறவிலேயே முகத்தாடையில் மூட்டு இணைத்து வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 32 ஆண்டுகளாக நாக்கை வெளியே நீட்டமுடியாமல் முன்பக்கத்தில் உள்ள ஒரு பல்லை மருத்துவர்கள் உதவியோடு உடைத்து அதன் வழியே உணவை திரவமாக உட்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முகத்தாடை அறுவை சிகிச்சை செய்ய கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டீன் ஜெயசிங் தலைமையில் முக அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் குழு அப்பெண்ணின் வாயை திறக்க உதவியாக இருக்கும் இணைந்திருந்த மூட்டுவை மீண்டும் செயல்படவைத்து பிறவி ஊனத்தை சரிசெய்து சாதனை படைத்தனர்.தற்போது அப்பெண்ணால் வாயை திறந்து நாக்கை வெளியே நீட்ட முடிகிறது. மேலும் திட உணவுகளையும் உண்ண முடிவாக தெரிவிக்கிறார். இவ்வகை சிகிச்சை இதுவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு பிறகு இங்குதான் நடைபெற்றுள்ளது, மேலும் இவ்வகை சிகிக்கைக்கு தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலையில் அரசு மருத்துவமனையில் முழு பாதுகாப்புடன் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
Next Story