கந்தம்பாளையம் அருகே முன்விரோத காரணமாக ஒருவர் கொலை.

X
Paramathi Velur King 24x7 |15 Feb 2025 9:24 PM ISTகந்தம்பாளையம் அருகே முன் விரோத காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.
பரமத்தி வேலூர்,பிப்.15: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள செருக்கலை தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் விருமன் மகன் அண்ணாதுரை (54). மரம் அறுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் இவர்கள் வீட்டின் அருகே உள்ள வீரமணி அவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீரமணியின் மகன் அசோக் குமார் 14ஆம் தேதி கரிச்சிபாளையத்தில் உள்ள ஒயின் ஷாப்பில் அவரது நண்பர் விஜயகுமாருடன் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அண்ணாதுறை அசோக் குமாரை பார்த்து ஜாடை பேசி உள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு அங்கிருந்து அண்ணாதுரை வீட்டுக்கு சென்ற நிலையில் அசோக் குமார் தனது அண்ணன் இன்னு சாமிக்கு போன் மூலம் அண்ணாதுரை என்னிடம் பிரச்சனை செய்ததாக கூறி தகவல் தெரிவித்துள்ளார். பின்பு அசோக் குமாரும் அவரது அண்ணன் சின்னசாமியும் அண்ணாதுரை வீட்டுக்கு சென்று வாய் தகராறு ஈடுபட்ட போது தகராறு பெரிதாக மாறி அசோக் குமார் மற்றும் சின்னசாமி இருவரும் தான் வைத்திருந்த சூரி கத்தியை எடுத்து அண்ணா துறையின் மார்பில் குத்தியுள்ளனர். அண்ணாதுரை அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்த போது இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அண்ணா துறையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அண்ணாதுரை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்ற நல்லூர் காவல்துறையினர் அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக் குமார் மற்றும் சின்னசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
