ஆரணி அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. ஆரணி அதிமுக மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் திண்ணைப்பிரச்சாரம் நடைபெற்றதில் மாவட்டசெயலாளர் எல்.ஜெயசுதா தலைமை தாங்கினார். அனைவரையும் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்ப்ட மக்கள் நலதிட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகம் செய்தார். உடன் நகரசெயலாளர் அசோக்குமார், ஒன்றியசெயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயபிரகாஷ்,திருமால், மாவட்ட இணைசெயலாளர் வனிதாசதீஷ், நகர மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், குமரன், சதீஷ், ’எஸ்.கே.வெங்கடேசன், .சிறுபான்மை பிரிவு மாவட்டசெயலாளர் உசேன்ஷெரீப் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.
Next Story



