ஆலங்குளம் அருகே கேரள லாட்டரி சீட்டு விற்றவா் கைது

X
.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா். குருவன்கோட்டை அக்கினி மாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் தங்கதுரை(54). இவா் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை அவரது வீட்டில் சோதனையிட்டனா். அங்கு 204 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கதுரையைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
Next Story

