வெள்ளப்பனேரியில் மயான சாலைக்கு அடிக்கல்

X
தென்காசி மாவட்டம் மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளப்பனேரியில் அயோத்திதாசா் பண்டிதா் திட்டத்தின் கீழ் ரூ.24.90 லட்சத்தில் மயான சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, கலந்துகொண்டு புதிய மயான சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். இதில், மானூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஸ்ரீலேகா, துணைத் தலைவா் கலைச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் பால்ராஜ், பெரியதுரை, அன்பழகன், பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் பசுபதி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி விஜயன், கிளைச் செயலா்கள் சாமிதுரை, முத்துசாமி, ஜோசப், மாரித்துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Next Story

