வெள்ளக்கோவிலில் மூன்றாம் ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே கல்லாங்காட்டுவலசு அருள்மிகு ஸ்ரீ லட்சுமி கணபதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய பவளக்கொடி கும்மியாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காங்கேயம் வெள்ளகோவில் கல்லாங்காட்டுவலசு  அருள்மிகு ஸ்ரீ லட்சுமி கணபதி, அருள்மிகு ஸ்ரீ ஜலகணபதி, அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, அருள்மிகு ஸ்ரீ கால பைரவர், அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, அருள்மிகு ஸ்ரீ சப்த கன்னிமார் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ நவகிரகங்கள், அருள்மிகு ஆதி கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கு மூன்றாம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மகாலட்சுமி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. இறுதியாக கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தின் தமிழ் மனம் விருது பெற்ற உலக சாதனை படைத்த பவளக்கொடி கும்மியாட்ட அம்மன் கே விஸ்வநாதன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடனம் ஆடினர். வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளாமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் கோவில் பணிகளை  ராஜேஷ்,சுகப்ரியா,சித்ரா கந்தசாமி,ஆதவ்,ஆதிக் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story