விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெருசா எடுத்துக்க வேணாம் - கோவை விமான நிலையத்தில் சீமான் பேட்டி !

X

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்று கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மக்களுக்காக வந்திருக்கிறேன் அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன். விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவை தான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார் என்று கூறினார். அண்ணாமலை குண்டுவெடிப்பு நினைவஞ்சலி கூட்டத்தில் பேசும்போது பாஷாவை அப்பா என்று சீமான் அழைத்தார் என்று குற்றச்சாட்டு முன்வைத்தார் என்ற கேள்விக்கு, குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றவரை இவர் எப்படி பார்க்கிறார்?, குஜராத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இருக்கிறார்களா? இல்லையா?, ஈழத்தில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இல்லையா?, அவர்களைப் பற்றி எல்லாம் உங்களின் கருத்து என்ன?. அந்த இலங்கை இப்போது உங்களுக்கு நட்பு நாடாக இருக்கிறதே எப்படி?.. மணிப்பூர் கலவரத்தில் கொன்று ஒழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?, நிர்வாணப்படுத்தி வீதியில் அழைத்துக் கொண்டு போய், தீ வைத்து கொளுத்தினார்களே அவர்கள் யார்?, கோவை குண்டுவெடிப்பை பற்றி பேசுபவர்கள் ஒரு முறையாவது குஜராத்தை பற்றி பேசுங்கள்.. ராஜீவ் காந்தி கொலை பற்றி பேசுகிறவர்கள், அவர்களால் அனுப்பப்பட்ட ராணுவம் எங்களுடைய தாய் நிலத்தில் செய்த கொடுமைகளை பற்றியும் பேசுங்கள்.. என் இன மக்களுக்கு செய்த பேரழிவைப் பற்றியும் பேசுங்கள்.. நீங்கள் ஓட்டை பொறுக்குவதற்கு பேசுகிறீர்களா? இல்லை நான் பேசுகிறேனா?.. அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் இதுவரை எனக்கு இஸ்லாமிய பெருமக்கள் ஓட்டு போட்டது கிடையாது. நான் ஓட்டுக்காக நிற்கிறேன் என்றால் இதை பேசி இருக்கவே மாட்டேன். நான் நாட்டுக்கானவன் மண்ணுக்கானவன் மக்களுக்கானவன், என் மரணம் கூட எனக்கு வலிக்காது. ஏனென்றால் நான் பிறவி கடனை செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய முன்னோர்கள் கூட எந்த பலனையும் எதிர்பார்க்காமல் தான் இறந்து போயிருக்கிறார்கள். நீங்கள்தான் ஓட்டை சந்தையாக்கி இருக்கிறீர்கள். வாக்கு விற்பனை செய்யும் சந்தையாக முழுமையாக மாற்றி விட்டீர்கள்.. நான் ஏதாவது கூறினால் என்னை கைக்கூலி என்று கூறுவது, ஓட்டுக்கு பிச்சை என்று சொல்வது, எங்களை பிச்சை எடுக்கிறீர்கள் என்று சொன்னால் உங்களை என்ன கூறுவது... நீங்கள் பேசுவது எல்லாம் அநாகரிகமானது.. நான் சிறையில் இருக்கும் பொழுது இருந்து அவரை அப்பா என்று தான் அழைப்பேன்..நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. குற்றச் செயல்கள் நடக்கிறது என்றால் அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிங்கள். வரும் காலங்களில் இது போன்ற குற்றச் செயல்கள் நிகழாமல் இருக்க தலைவர் பெருமக்கள், முயற்சி செய்யுங்கள்.. மீண்டும் மீண்டும் அதையே கூறிக்கொண்டு சமூக இனக்கங்களை பிளந்து, கூறு போட்டு, மானுடத்தை கொன்றுவிட்டு, மதத்தை தூக்கி நிறுத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அம்பேத்கர், தான் வாழுகிற நாட்டை விட, தான் சார்ந்து இருக்கிற மதமே பெரிது என இவர்கள் செயல்பட தொடங்குவார்கள் ஆனால், இந்த நாடு சுக்கு சுக்கு சிதறுவதை எவராலும் தடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார், நான் உங்களிடம் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். அரசியல் லாபத்திற்காக பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்துவதற்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, பிரபாகரன் புகைப்படத்தை பயன்படுத்துவதால் அரசியல் லாபம் என்று கருதினால் அந்த பைத்தியங்கள் அவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரபாகரன் படத்தை அனைத்து கட்சிகளுமே போடலாம், ஆதாயம் இருந்தால் அனைவரும் அவரின் படத்தை தயவுசெய்து பயன்படுத்துங்கள் என்று கூறினார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சென்ற இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதை விட, இந்துமுன் விரோதத்தால் நடந்த கொலை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது,ஏற்றுக் கொள்ள முடியாதது. கள்ளச்சாராயம் காய்ச்சி அவர்கள் ஏற்கனவே வழக்கு வாங்கி சிறைக்கு சென்றவர்கள், மீண்டும் சிறையில் இருந்து வந்து அதே செயலை செய்யும்போது தடுக்கப்பட்டதால் தான் இந்த கொலை நடந்திருக்கிறது. ஆனால் காவல்துறை எடுத்த எடுப்பில் முன் விரோதத்தால் நடந்திருக்கிறது என்று கூறுகிறார்களே, முன்விரோதம் என்றால் என்ன என்று, வெளிப்படையாக கூறிஇருக்க வேண்டும். எப்படியாவது இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதையே நினைக்கிறார்கள். இதற்கு அங்கு காவல்துறை ஆணையர், வட்டாட்சியர், போன்றவர்களை அங்கு பணியிடை மாறுதல் செய்வார்கள். இதற்கு அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது. திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியர் தான் காரணம் என்று அரசு பொறுப்பேற்கவில்லை என்று கூறினார். ஏற்கனவே உங்களிடம் துப்பாக்கி அணுகுண்டு எல்லாம் இருக்கிறது என்று கூறியதால் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லையா என்ற கேள்விக்கு, நாங்களே ஒவ்வொருவரும் வெடிகுண்டு, அணுகுண்டு.. நாங்கள் ஒரு வார்த்தை பேசினால் அது ஒரு வாரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கிறது. சேகுவேரா, வினையாற்றாத சொல் வீண் என்று கூறி இருக்கிறார், அப்படி இருக்கையில் நாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வெடிகுண்டு தான் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், வட இந்தியர்கள் எந்தவித ஒழுங்கையும் கடைபிடிக்க மாட்டார்கள், ஈரோட்டில் வந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு தமிழர்களுக்கு வேலை கொடுக்காதீர்கள் என்று போராட்டம் நடத்தினார்கள்.. இப்பொழுது இது செய்தியாக இருக்கலாம் இன்னும் பத்து ஆண்டுகளில் ஈழத்தில் என்ன நடந்ததோ, வந்த சிங்களர்கள் எங்களை எப்படி அடித்து விரட்டினார்களோ அதே போன்று இங்கு நடக்கும். அங்கு விரட்டும்போது இங்கு நாங்கள் நிற்பதற்கு ஒரு நிலம் இருந்தது. ஆனால் அவர்கள் விரட்டும் போது இங்கு இருப்பவர்களுக்கு நிற்பதற்கு நிலம் கூட இருக்காது என்று கூறினார். நெடுங்காலமாக இந்த நாட்டில், கட்சி அரசியல் தேர்தல் அரசியலையே செய்து கொண்டிருக்கிறீர்கள், மக்கள் அரசியலை பேசி முன்னெடுக்கவே இல்லை.. தேர்தல் வியூக வகுப்பாளர்கள், கொண்டு தேர்தலை வெல்வது மட்டுமே உங்களுடைய நோக்கமாக வியாபாரமாக மாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் செய்வது ஒரு தேர்தல் அரசியல் மட்டும் தான், மக்கள் அரசியல் எப்பொழுது தான் செய்யப் போகிறீர்கள்.. மக்கள் பிரச்சனைக்கான போராட்டங்கள் தீர்வுகள் என எதையுமே முன்னெடுப்பது இல்லை. மக்கள் அரசியல் தான் இங்கு தேவை. என் தம்பி விஜய் எடுத்துக் கொள்ளலாம், ஜான் ஆரோக்கியசாமி என்ற தேர்தல் வகுப்பாளர் இருக்கிறார்.. அதன் பிறகு ஆதார் அர்ஜூனா என்ற வியூக வகுப்பாளர் இருக்கிறார். இவர்களுக்கெல்லாம் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இங்கு நடக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியும்.. ஆனால் பீகாரில் இருந்து ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் வருகிறார் என்றால், உங்களுக்கெல்லாம் மூளை அறிவு என்று ஏதாவது இருக்கிறதா?, திருப்பரங்குன்றத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது அல்லவா அது பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? அத்திக்கடவு அவிநாசி என்றால் தெரியுமா?, நொய்யல் ஆறு பிரச்சினை பற்றி தெரியுமா,?.. கருணாநிதி அம்மையார் ஜெயலலிதா வரை இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லையே?.. அதிமுக திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் தேவையா?.. இதே பிரசாந்த் கிஷோர் பீகாரில் நின்று strategy போட்டு ஜெயிக்கவில்லையே?... காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.. தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள்... பீகாரில் இருந்து வரும் ஒருத்தனுக்கு அறிவு இருக்கிறது தமிழ்நாட்டில் இருப்பவனுக்கு இல்லையா... உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்.. எனக்கு கொஞ்சம் காசு கொடு இந்தியாவிற்கே strategy செய்து கொடுக்கிறேன்.. ஏன் அகில உலகத்திற்கே செய்து கொடுக்கிறேன் என்று கூறினார். நாம் இந்த நிலத்தின் மக்கள் இங்கு நிலம் சார்ந்த பிரச்சினைகள் என்ன என்பது தெரியும், நம்ம நிலையே அறிவார்ந்த மூத்த அறிஞர்கள் இருக்கிறார்கள், அதைத் தாண்டி எதுவும் தேவையில்லை என்று கூறினார். திராவிட மாடல் ஆட்சிக்கு தலைவர் ஸ்டாலின், ஆன்மீக ஆட்சிக்கு மாடல் சேக்கர்பாபு.. திராவிட கலை, திராவிட ஓவியம் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் 5000 ஆண்டுக்கு முன்பே இரும்பை உருக்கி இருக்கிறார்கள் என்று தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் , என்ன செய்வது என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். ட்ரம்ப் மற்ற நாட்டவரை வெளியேற்றுகிறாரே என்ற கேள்விக்கு, ட்ரம்ப் இதை செய்வார் என்று அனைவருக்கும் தெரிந்ததுதானே, இந்த பூமி என்பது அனைவருக்குமானது. சக மனிதனுக்கு வாழவோ நிற்கவோ இடம் இல்லை என்பதை, அருவருக்கத்தக்க கொடுமையான ஒன்றாக நான் பார்க்கிறேன்.. இடமில்லாமல் தேடிச் செல்லும் மக்களை அரவணைப்பது தான் தேசத்திற்கு பெருமை என்பதை நான் நினைக்கிறேன். வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்று தான் இருக்கிறதே தவிர வந்தவரை வாழவைக்கும் அமெரிக்கா என்பது இல்லை என்று கூறினார்.
Next Story