நெய்யூர்: காண்ட்ராக்டருக்கு கத்தி குத்து

X
குமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் பகுதி சேர்ந்தவர் செல்லதுரை மகன் அஜித் (32). டிப்ளமோ முடித்துவிட்டு கட்டிட கண்டக்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் பால்துரை (55). இருவரும் உறவினர்கள். கடந்த 2022ல் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் பால் துரை போதையில் சண்டை போட்டாராம். இதனை அஜித்தின் மைத்துனர் கண்டித்தார். இதனால் பால் துரைக்கு அஜித் மீது விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அஜித் நடந்து வரும்போது அங்கு வந்த பால்துரை மகன்கள் மகேஷ், அஜித் ராம் மற்றும் ஜெனிஷ் ஆகியோர் அஜித்தை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் திட்டி, பின்னர் மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அஜித் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் மகேஷ், அஜித் ராம், பால் துரை, ஜெனிஸ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

