பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திருமண நிதி உதவி அமைச்சர் வழங்கினார்

திருவள்ளுரில் 1.11 கோடியில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-திருமண நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை அமைச்சர் நாசர் வழங்கினார்
திருவள்ளூர்- மாவட்டம் திருவள்ளுரில் 1.11 கோடியில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-திருமண நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை அமைச்சர் நாசர் வழங்கினார், தமிழக அரசு சமூக நலத்துறையின் மூலம் விதவை மகள், ஆதரவற்ற பெண், கலப்பு திருமணம், விதவை மறுமணம் போன்ற பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் 2024-2025 ஆண்டுக்கான ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதில் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுகு உட்பட்ட 181 பயனாளிகளுக்கு 1.11 கோடியில் தாலிக்கு தங்கம் மற்றும் 74 லட்சம் ரூபாய் ஏழை பெண்களின் திருமண நிதி உதவியை சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு.நாசர் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன், துரை சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story