சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எம்பி,எம்எல்ஏகூட்டாக பேட்டி

X

செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எம்பி, எம்எல்ஏ கூட்டாக பேட்டி
செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எம்பி, எம்எல்ஏ கூட்டாக பேட்டி ஆரணி பிப்.16 எப்போதும் திமுக அரசு விவசாயிகளை பாதுகாத்து வருகிறது சில தினங்களாக விவசாயிகள் என்ற போர்வையில் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எம்பி எம்எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் நேற்று மாலை கூட்டாக பேட்டி அளித்தனர். செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று மாலை எம்பி எம்எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் நேற்று மாலை கூட்டாக பேட்டியில் குறிப்பிட்டதாவது, மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அப்போதைய உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு அவர்கள் செய்யாறு தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 2008 ஆம் ஆண்டு முதல் தொழிற்சாலையாக காலணி தொழிற்சாலையை அன்றைய துணை முதல்வராக இருந்த தற்போதைய திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தற்போது செய்யாறு சிப்காட்டில் 25 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் உட்பட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். செய்யாறு சிப்காட் தொடங்கியதால் செய்யாறு தொகுதி மட்டுமல்லாது ஆரணி, வந்தவாசி தொகுதிகளும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதுமட்டுமல்லாமல் அண்டை மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களும் வேலை வாய்ப்பை பெற்றனர் குறிப்பாக கிராம புற மக்களின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் சிப்காட் அலகு திட்டம்1, அலகு திட்டம் 2, ஆகியவைகளில் தற்போது 54 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மூன்றாவது அலகிற்காக 2019ம் ஆண்டு அதிமுக அரசு நிலம் கையகப்படுத்த அறிவித்திருந்தது அரசின் கொள்கை ரீதியாக அடுத்து வந்த திமுக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது அதன்படி மேல்மா, அத்தி, இளநீர்குன்றம், தேத்துரை, நெடுங்கல், வீரம்பாக்கம், நர்மாபள்ளம், குரும்பூர், வடஆளப்பிறந்தான் ஆகிய 9 கிராமங்களில் அரசு அறிவித்த 3174 ஏக்கரில் அரசுக்கு சொந்தமான இடம் 375 ஏக்கர், குவாரி நிலங்கள் 180 ஏக்கர், பட்டா நிலம் நன்செய் 7 ஏக்கர், புன்செய் 2791 ஏக்கர் மொத்த பட்டாதாரர்கள் 4000 பேர். இதில் விலை நிலமாக ஒரு போகம் மட்டும் விளையக் கூடியது சுமார் 800 ஏக்கர் மட்டுமே மீதமுள்ள நிலங்கள் முழுவதும் தரிசு பூமி ஆகும். நிலங்கள் கையகப்படுத்துவதற்கு ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலானோர் ஒப்புதல் அளித்து வருவாய்த்துறையிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் மக்கள் பிரதிநிதியான எங்களிடத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு பணத்தை உடனடியாக அரசிடமிருந்து விரைந்து பணம் பெற்றுத் தருமாறு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயி இல்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த அருள் என்பவரின் தூண்டுதலின் பேரில் சில விவசாயிகள் மேல்மா சிப்காட் எதிர்ப்பு என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் தூண்டுதலோடு அவர்களது லாப நோக்கத்திற்காக சில விவசாயிகளை தவறாக பயன்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வகையில் சமூக வலைத்தளங்களில் கையகப்படுத்தும் நிலங்களில் உள்ள மரங்கள், கிணற்றின் தன்மை உள்ளிட்டவைகளை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் விரட்டி அனுப்பி விட்டதாக வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது போன்ற வீண் வதந்திகளை பரப்பும் விஷமிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் விவசாயிகளுக்கு எப்போதும் திமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும் வீண் வதந்திகளை நம்பாமல் இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு தொழில் வளர்ச்சிக்காக கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
Next Story