கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு
X
சிவகங்கை நகரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் இருந்து 14 ஜோடி மாடுகளும், காளைகளை அடக்க 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே வடத்தால் கட்டப்பட்ட ஒவ்வொரு காளையையும் 20 நிமிடங்களில் 9 போ் கொண்ட மாடு வீரா்கள் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது. போட்டியில் மாடு முட்டியதில் 15-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்தனா். மேலும், களத்தில் இறங்கிய ஒரு காளையும் காயம் அடைந்தது.
Next Story