வார விடுமுறையை முன்னிட்டு வேளாங்கண்ணி
கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும், வேளாங்கண்ணிக்கு வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அதன்படி, வார விடுமுறை முன்னிட்டு, வேளாங்கண்ணிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இதனால், வேளாங்கண்ணி பேராலயம், பழைய மாதா கோவில், விண்மீன் ஆலயம், நடுத்திட்டு, கடைவீதிகள் மற்றும் கடற்கரை ஆகிய இடங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள், கடலில் உற்சாகமாக குளித்தும், கடற்கரையில் இளைப்பாறியும், செல்பி எடுத்து மகிழ்ந்தும் பொழுதை கழித்தனர். அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் பொருட்டு, வேளாங்கண்ணி போலீசார் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் கடலில் நீண்ட தூரத்திற்கு சென்று குளிக்கும் நபர்களை எச்சரித்து கரையேற்றினர்.
Next Story







