ஓய்வு பெற்ற போலீஸ் இறப்புக்கு போலீசார் இறுதி மரியாதை

X
Komarapalayam King 24x7 |16 Feb 2025 6:40 PM ISTகுமாரபாளையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இறப்புக்கு போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் வசிப்பவர் வெங்கடாசலம், 63. ஓய்வு பெற்ற போலீஸ். இவர் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவரை இவரது மகன்கள் ஈரோடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12:45 மணியளவில் இறந்தார். இவர் சங்ககிரி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் இறந்ததால், இவருக்கு போலீசார் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story
