வேதாரண்யத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில், வேதாரண்யம் மேலாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம், புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேதாரண்யம் நகராட்சி தலைவர் மா.மீ.புகழேந்தி தலைமை வகித்து, ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். வேதாரண்யம் மேலாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாளர் கிருபாகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் அன்பரசு மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில், கூட்டுறவு சங்க செயலாட்சியர் முத்துராஜா நன்றி கூறினார்.
Next Story

