விபத்தில் கல்லூரி ஆசிரியர் பலி

X
Komarapalayam King 24x7 |16 Feb 2025 8:16 PM ISTஅரசு பஸ், டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி ஆசிரியர் பலி, மற்றொருவர் படுகாயம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நாட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகுகுமார், 36. ஈரோடு கலை கல்லூரி ஆசிரியர். நேற்று மாலை 01:15 மணியளவில், இவருக்கு சொந்தமான ஹீரோ சூப்பர் ஸ்ப்லேண்டர் வாகனத்தில், இவரது உறவினர் லாரி ஓட்டுனர் சசிகுமார், 34, ஓட்ட, சசிகுமார் பின்னால் உட்கார்ந்தவாறு வர, குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கீழே நுழைந்து வெளியில் வரும் போது, அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது, வழியில் ரகுகுமார் இறந்தார். சசிகுமார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து ஏற்படுவதை தடுக்க தான் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இது போல் அஜாக்கிரதையாக வந்தால், எத்தனை பாலம் கட்டி என்ன பலன்? என்று பொதுமக்கள் கூறினார்கள். விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுனர் தலைமறைவானார். அவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
