இஸ்லாமியர்களின் சொத்தை திருடும் நோக்கில் வக்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது : எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர்

இஸ்லாமியர்களின் சொத்தை திருடும் நோக்கில் வக்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது : எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர்
X
இஸ்லாமியர்களின் சொத்தை திருடும் நோக்கில் வக்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது : எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர்
விருதுநகரில் நடைபெற்ற வக்பு உரிமை மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் வக்பு உரிமை மீட்பு கருத்தரங்கில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மேலும் வக்பு உரிமை மீட்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஒன்றிய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ‌ கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதா 2024 ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும் 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வக்பு உரிமை மீட்பு கருத்தரங்கு விருதுநகரில் நடைபெற்றது. மேலும் வக்பு நிலங்களை திருடும் சட்டமாக இதை பார்க்கிறோம். வக்பு சொத்தானது இறைவனுக்காக கொடுக்கப்பட்ட சொத்து ஆகும். ஆனால் இந்த சட்ட திருத்தத்தின்‌படி 12 வருடம் ஒருவர் அனுபவ பாத்தியம் இருந்தால் அவர் வக்கு சொத்தை உரிமை கொண்டாடலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனைக்குரிய இடமாக இருந்தால் அந்தப் பிரச்சனை முடியும் வரை அதை அரசு இடமாக கணக்கில் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது எனவும் வக்பு சொத்தை திருடுவதற்காக இதை கொண்டு வந்திருக்கின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும் பாராளுமன்ற கூட்டுக் குழுவில் இருக்கக்கூடிய 9 இஸ்லாமிய எம்பிக்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்து உள்ளனர் எனவும் இஸ்லாமியர்கள் முன்னேற்றத்திற்காகவும், ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்தை மீட்பதற்காகவும் இதை கொண்டு வருகிறோம் என பாஜக பொய் உரைக்கிறது எனவும் பாஜக அரசு சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்வதன் வெளிப்பாடு இது என எஸ் டி பி ஐ குற்றம்சாட்டுகிறது என்றார். மேலும் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படும் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு இதை தோற்கடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். மேலும் இந்த சட்ட திருத்தத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு நிறைய திருத்தங்களை சொன்னது ஆனால் அதையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு முதலில் அவர்கள் எதை கொண்டு வர வேண்டும் என விரும்பினார்களோ அதை செய்து உள்ளனர் எனக் கூறினார்.
Next Story