புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
X
புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
நிதி அமைச்சரின் முழு முயற்சியால் தான் ம.ரெட்டியபட்டி பகுதியில் இந்த சார் பதிவாளர் அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது, விரைவில் சொந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும் - ம.ரெட்டியபட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பிற்கு பின் ‌பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேச்சு நிதித்துறைக்கு படி அளக்கக்கூடிய பகவானாக அமைச்சர் மூர்த்தி இருக்கிறார் தமிழக பட்ஜெட் ரூ‌ 4 லட்சம் கோடி என்றால் வணிகவரித்துறையில் இருந்து ரூ 1.5 லட்சம் கோடியும், பதிவுத்துறையில் இருந்து ரூ 20 ஆயிரம் கோடியும் வருகிறது - ம.ரெட்டியபட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பிற்கு பின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியை சுற்றி 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.‌ இங்குள்ள பொதுமக்கள் பத்திரபதிவு செய்ய வேண்டுமென்றால் பல கிலோமீட்டர் தொலைவு உள்ள பந்தல்குடி, பெருநாழி, கமுதி போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ம.ரெட்டியபட்டியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது ம.ரெட்டியபட்டியில் வாடகை கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சார் பதிவாளர் அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து அலுவலகத்தின் செயல்பாடுகளை துவக்கி வைத்தனர். மேலும் புதிய அலுவலகத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சரின் முழு முயற்சியால் தான் ம.ரெட்டியபட்டி பகுதியில் இந்த சார் பதிவாளர் அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக ஒரு மணி நேரம் பயணம் செய்து பத்திர பதிவு செய்ய வேண்டிய சூழல் இருந்தது. துவக்கப்படும். தற்போது புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும் என பேசினார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நாள் நம்முடைய திருச்சுழி தொகுதியின் உடைய வரலாற்றில் குறிப்பாக நம்முடைய ம.ரெட்டியபட்டி பகுதியினுடைய வரலாற்றில் மிக மிக ஒரு முக்கியமான நாளாக நான் கருதுவேன். கனவு மெய்ப்பட வேண்டும் என்ற அந்த கொள்கைக்கு அடிப்படையில் ஒரு கனவு நினைவாகிறது என்கின்ற வகையில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இந்த பகுதியிலே ஒரு வெறும் கனவாக இருந்த இந்த சார் பதிவாளர் அலுவலகம், என்னுடைய நினைவு சரியாக இருக்கும் என்று சொன்னால் 1998 ஆம் ஆண்டில் நான் முதன்முறையாக அருப்புக்கோட்டை தொகுதியின் உடைய இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள்ளே நுழைகின்ற போது சட்டப்பேரவினுடைய வினாக்கள் பட்டியலில் நான் எழுப்பிய கேள்விகளில் முக்கியமான முதன்மையான கேள்வி நம்முடைய ம.ரெட்டியப்பட்டி ஊராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றினை அமைத்திட அரசு முன்வருமா என்கின்ற அந்த வினா 98 ஆம் ஆண்டிலேயே நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற போது எழுப்பிய அந்த வினாவிற்கான உண்மையான விடை ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு நெருக்கி கழிந்து இன்றைக்கு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அன்பிற்கு இனிய நம் தளபதி முக ஸ்டாலின் அவர்களின் முதலமைச்சராக வீற்றிருக்கக்கூடிய இந்த காலத்தில் அவருக்கு பின்னாலே நம்முடைய பகுதியைச் சார்ந்த ஒருவர் நம்முடைய மக்களின் தேவைகளை உணர்ந்து ஒருவர் நம்மை போன்ற கிராம மக்களுடைய நாடித்துடிப்பை உணர்ந்த ஒருவர் அவர்களுடைய நலத்தில் அக்கறை கொண்ட ஒருவர் இன்றைக்கு முதலமைச்சருக்கு பின்னாலே அமைச்சரவையில் இடம் பெற்று அதுவும் நம்முடைய வணிகவரித் துறை பத்திர பதிவுத்துறை போன்ற முக்கியமான துறைகளுக்கு பொறுப்பேற்று அவர் பொறுப்பேற்க கூடிய காலத்தில் இந்த சார்பதிவாளர் அலுவலகம் இங்கே வருவதற்கு நம்முடைய அன்பிற்கினிய அருமை அண்ணன் அமைச்சர் மூர்த்தி அவர்கள் இந்த பொறுப்பிலே இருக்கிற போது இது நிறைவேறி இருக்கிறது என்பதுதான் எனக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமையும் மகிழ்ச்சியாக நான் கருதுவேன். ஒவ்வொரு முறையும் பந்தல்குடிக்கும், பெருநாழிக்கும், கமுதிக்கும் அலைந்து கொண்டிருக்கக்கூடிய உங்களை அந்த கஷ்டத்திலிருந்து போக்கி உங்கள் வீட்டு வாசலிலே அதை உருவாக்குவதற்கு நம்முடைய அமைச்சர் அவர்களும் பதிவுத்துறை தலைவர் அவர்களும் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை இங்கே உருவாக்கித் தந்திருக்கிறார். அமைச்சர் மூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பான வகையிலே இந்த இரு துறைகளுக்கும் இன்றைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவர்கள் பணியாற்றுகிறார். அவருடைய பணிகளை மதுரை மாவட்டத்து மக்கள் அவருடைய தொகுதியினுடைய மதுரை கிழக்கு மக்கள் எந்த அளவிற்கு பெரும் பயன்களை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு நிதி துறை அமைச்சர் என்ற வகையில் அவராலே மிகப்பெரிய பயனாளி ஒருவர் உலகத்தில் இருக்கிறார் என்று சொன்னால் அது தங்கம் தென்னரசு தான். அதற்கு காரணம் நிதித்துறை அமைச்சர் என்ற வகையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவது தான் என் வேலை. நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர் நிதி அமைச்சர் அதனால் அவரிடம் நிறைய பணம் இருக்கும் இருக்கும் போல தெரிகிறது என நினைக்கிறார்கள். நிதி அமைச்சராக இருப்பவர் வரக்கூடிய பணத்தை பல்வேறு திட்டங்களுக்கு தேவையான அளவிற்கு ஒதுக்கி கொடுப்பதில் தான் அவருக்கு வேலை இருக்கிறது. ஒரு துறையிலிருந்த பணம் நமக்கு வந்தால் தான் நாட்டினுடைய மக்களுக்கு பல திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியும். எங்களுக்கு படி அளக்கக்கூடிய பகவான் என்கின்ற முறையில் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது மூர்த்தி அவர்கள் தான்‌. அவருடைய துறைகளில் இருந்து தான் அதிக பணம் வருகிறது. தமிழ்நாடு பட்ஜெட் ரூ நாலு லட்சம் கோடி என்று சொன்னால் அவருடைய துறையான வணிகவரித்துறையிலிருந்து ஏறத்தாழ ரூ 1.5 லட்சம் கோடி வருகிறது. ஏறத்தாழ ரூபாய் 20,000 கோடி அளவிற்கு பதிவுத்துறையில் இருந்து பணம் வருகிறது. இன்னும் கூட நான் பெருமையாக சொல்வேன். இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை மாநிலங்களிலும் இந்த வணிகவரிகளை ஜிஎஸ்டி வசூலிலே எல்லா மாநிலங்களை காட்டிலும் ஏன் இந்திய சராசரியை விட மிக அதிகமான அளவிலே நம்முடைய மாநிலத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் அந்த வரி வருவாய் என ஈட்டி தரக்கூடிய பெருமை நம்முடைய பத்திர பதிவுத்துறை அமைச்சருக்கும் அவருக்கு உடனிருந்து பணியாற்றக்கூடிய அதிகாரிகளுக்கும்‌ உண்டு என்பதை நான்‌ மனம் திறந்து சொல்வேன். பத்திரப்பதிவுத்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் அபாரமான வளர்ச்சியை தந்திருக்கிறார்கள் என பேசினார்.
Next Story