தேசிய நெடுஞ்சாலையில் கார் இருசக்கர வாகனம் விபத்து

X
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், முருக்கன்குடி பிரிவு பாதை என்ற இடத்தில், சாலையை கடக்க முயன்ற XL சூப்பர் மீது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதி வேகமாக வந்த இனோவா கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் சாலை விபத்தில், ஒரே டூவீரில் பயணித்த நண்பர்கள் 6 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே பெருமத்தூரை சேர்ந்த 17 வயது சிறுவன் முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மங்களமேட்டை சேர்ந்த சிவராமன்(16), என்ற பள்ளி சிறுவன் கவலைக்கிடமாகவும், வெற்றிவேல் (16), பிரகாஷ் (16), ஆகாஷ் (16), ரகு (20), ஆகிய 4 பேரும் படுகாயங்களுடனும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், விபத்துக்கு காரணமான இனோவா காரை ஓட்டி வந்த, பயணித்த சென்னையைச் சேர்ந்த 6 பேரை தேடி வருகின்றனர்.
Next Story

