போலீஸ் விசாரணை

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனது குடும்பத்தினருடன், ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் இளைய மகள் உள்ளார். இந்நிலையில் இவரது இளைய மகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த அசோக் என்பவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதில் அவரது இளைய மகள் கர்ப்படைந்துள்ளார். இதனால், கடந்த ஜன 2-ம் தேதி, போக்சோ வழக்கில் அசோக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, காளிங்கராயன் பாளையம் உள்ளிக்காட்டிலுள்ள தனது சகோதரி ஸ்ரீமதி வீட்டில், இளைய மகள் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வாட்ஸ் ஆப் மூலம், “ எல்லாரும் என்னை மன்னிச்சிங்கா உங்க எல்லோரையும் விட்டு போறேன்” என ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு, தூக்கு போட்டு இளைய மகள் தூக்கு போட்டுக் கொண்டார். இதனால், பதறியடைந்து உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, அவர் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து, மாரியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

