விருதுநகரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

விருதுநகரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
X
விருதுநகரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் ஆக பொறுப்பு ஏற்று மக்கள் நலன் சார்ந்த பொது பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட் குறித்து திமுக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளையும் போலியான விளம்பரங்களையும் செய்து வரும் நிலையில் மத்திய பாஜகவின் பட்ஜெட் அறிவிப்பில் உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் குறித்தும் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் விருதுநகர் ** தேசபந்து மைதானத்தில் பாஜக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்திற்கு பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் G பாண்டுரங்கன் தலைமை தாங்கினார் மேலும் இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் மீனா தேவ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலாளர் மீனாதேவ் பேசுகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாநில அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் பேசாமல் மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் உள்ள குறைகளை கூறுவதாக பேசி வருகிறார் இதுவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் என்பதற்கு சிறந்த உதாரணம் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு தற்போது அதிக அளவிலான நிதி ஒதுக்கி இருப்பதாகவும் திமுகவுடன் சேர்ந்து கொண்டு மத்திய பட்ஜெட்டை குறை கூறும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது தற்போது ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவான அளவில் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்
Next Story