மதிமுக பிரமுகர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
கரூர் மாவட்டம், மாநில மாணவரணி துணைச் செயலாளர் குளித்தலை பூமிநாதன் - சண்முகப்பிரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி குளித்தலை பெரிய பாலம் தனியார் மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் இன்று நடைபெற்றது. குளித்தலை நகர செயலாளர் சிவேஷ் வர்ஷன் அனைவரையும் வரவேற்றார். மாநில மாணவர் அணி செயலாளர் பால சசிகுமார் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி எம்.பி துரை வைகோ கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் வட சென்னை கிழக்கு ஜீவன், திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு சேரன், தருமபுரி ராமதாஸ், நாமக்கல் கிழக்கு சேகர், அரியலூர் இராமநாதன், தஞ்சாவூர் தெற்கு தமிழ்ச்செல்வன், சேலம் மாநகர் டாக்டர் சங்கேஸ்வரன், தஞ்சாவூர் மாநகர் துரைசிங்கம், தீர்மானக் குழு உறுப்பினர் கவிஞர் மணிவேந்தன், மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி இராசேந்திரன், சட்டத்துறை செயலாளர் சூரி நந்தகோபால், தணிக்கைக் குழு உறுப்பினர் நாமக்கல் பழனிச்சாமி, சட்ட திருத்தக் குழு உறுப்பினர் கொடுமுடி சண்முகம், திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் பல்லவி ராஜா, குளித்தலை நகர மக்கள் இயக்கத் தலைவர் சீத்தாராமன், கரூர் மாவட்ட நிர்வாகிகள் அவைத்தலைவர் ஆண்டிப்பட்டி ராமசாமி, மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகம், வினோதினி தங்கவேல், ஆசிரியர் வடிவேல், மாநில மகளிர் அணி துணை செயலாளர் பாப்பாத்தி குமரேசன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் வரப்பட்டி பூபதி, தங்கவேல், பொன்னம்பலம், மணவாடி கேசவன், வேலுச்சாமி, அப்பாஸ் அலி, செல்வம், மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, கரூர் சித்தார்த், நகர மன்ற துணைத் தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகரத்தினம், குளித்தலை ஒன்றிய செயலாளர் அரவை மாணிக்கவாசகம், பொதுக்குழு உறுப்பினர் ரகுபதி, குளித்தலை ரவிச்சந்திரன், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பவுன் ராஜ், முகமது ரிலுவான் கான், கோபாலகிருஷ்ணன், மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் முசிறி இரவிச்சந்திரன், கோவை மாவட்ட துணை செயலாளர் பயனியர் தியாகு, பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி, திருச்சி தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வைகோ பழனிச்சாமி, நகர செயலாளர் முத்துப்பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், அண்ணாதுரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story