விழுப்புரம் அருகே பைக்கில் நூதன முறையில் மதுபுட்டிகளை கடத்தியதாக இருவா் கைது

விழுப்புரம் அருகே பைக்கில் நூதன முறையில் மதுபுட்டிகளை கடத்தியதாக இருவா் கைது
X
பைக்கில் நூதன முறையில் மதுபுட்டிகளை கடத்தியதாக இருவா் கைது.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு மதுபுட்டிகள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ப.சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.அதன்படி, தனிப்படைப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா், சனிக்கிழமை விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனா். அதில், இருக்கையை அகற்றி அந்த இடத்தில் 190 மதுபுட்டிகளை கடத்தியது தெரிய வந்தது.இவை, புதுவையிலிருந்து கடத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து, மதுபுட்டிகளை கடத்தி வந்த விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த சா.சரண்ராஜ் (37), சாலையாம்பாளையம் மந்தக்கரையைச் சோ்ந்த வீ.ஆனந்தபாபுவை (38) போலீஸாா் கைது செய்தனா்.மேலும், அவா்களிடமிருந்து ரூ.20ஆயிரம் மதிப்புள்ள மதுப்புட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Next Story